• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Pegasus: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அரசின் கோரிக்கை நிராகரிப்பு... சிறப்பு நிபுணர் குழு அமைப்பு!

Pegasus: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அரசின் கோரிக்கை நிராகரிப்பு... சிறப்பு நிபுணர் குழு அமைப்பு!

பெகாசிஸ் ஒட்டுகேட்பு விவகாரம்

பெகாசிஸ் ஒட்டுகேட்பு விவகாரம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் (pegasus snooping case ) இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்துள்ளது. தேச பாதுகாப்பு என்பதால் நீதிமன்றம் மௌனமாக இருக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

  • Share this:
    பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த  உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி  ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. மேலும், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. தேச பாதுகாப்பு என்பதால் நீதிமன்றம் மௌனமாக இருக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அவற்றை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. எனினும், இந்த விவகாரத்தில் சுயதீன குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது,  பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தகவல்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் பிரமாண பத்திரத்தில் குறைவாக தகவல்களே தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திருந்தால், அது உதவியாக இருக்கும். எனினும் குற்றச்சாட்டுக்கு தெளிவற்ற மற்றும் சாதாரண மறுப்பு மட்டுமே மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது.

    இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு; அரை நாள் மட்டுமே வகுப்பு... வருகை பதிவு கட்டாயமில்லை- புதுச்சேரி அமைச்சர்


    பல நேரங்களில் தேச பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் கூறியுள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. தேச பாதுகாப்பு  என்பதால் நீதிமன்றம் மௌனமாக கடந்து போக முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி  ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டது.  முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அலோக் ஜோஷி மற்றும் தொழில்நுட்ப நிபுணர் முனைவர் சந்தீப் ஓபராய் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும் படிக்க: உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!


    இதேபோல், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.குஜராத் தேசிய தடய அறிவியல் பல்கலைக்களத்தின் டீன்  பேராசிரியர்  நவீன் குமார் சௌதரி , கேரள மாநிலத்தின்  அமிர்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். பிரபாகரன் மற்றும் மும்மை ஐ.ஐ.டி பேராசிரியர் முனைவர். அஷ்வின் அனில் குமஸ்தே ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  இந்த வழக்கின் விசாரணை 8 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: