பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா, இல்லையா?- பதிலளிக்க மத்திய அரசு மறுப்பு

உச்ச நீதிமன்றம் - பெகாசஸ்

பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில், இந்த மென்பொருளை பயன்படுத்துகிறோமா இல்லையா என்பதை பொதுவெளியில் கூற முடியாது என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு  விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இஸ்ரேலின் NSO நிறுவனம் தயாரித்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக் செய்ய பயன்படுத்தப்படும். இது பயங்கரவாதத்துக்கு எதிரான ஆயுதம் என்ற அடிப்படையில் அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வழங்கி வருகிறது.

  இந்த மென்பொருள் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதுமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமோ கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

  இதையும் படிக்க: உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம்: அரசியல் கட்சிகள் விமர்சனம்!


  அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மென்பொருளை பயன்படுத்தவில்லை என்று சொன்னால் பயங்கரவாத குழுக்கள் எச்சரிக்கை ஆகிவிடும். அதேபோல், பயன்படுத்துகிறோம்  என்று சொன்னால்,  இந்த மென்பொருளை தடுக்கும் மென்பொருளை பயன்படுத்த அவர்கள் தொடங்கிவிடுவார்கள்.  எனவே, இந்த மென்பொருளை பயன்படுத்துகிறோமா இல்லையா என்பதை பொதுவெளியில் கூற முடியாது என்று தெரிவித்தார்.  இந்த விவ்காரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்றும் அவர்  குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க:  மோடி ஆட்சியில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை - ராகுல்காந்தி விமர்சனம்


  இந்த விவகாரம் தொடர்பாக அரசு குழு அமைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சம்ர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

  இதையடுத்து, நாட்டில் பாதுகாப்பு குறித்த விசயங்களை அறிந்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை.  சட்டத்துக்கு புறம்பாக அரசு எந்த முறையையாவது பின்பற்றியதா என்பது குறித்து மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில்  2 , 3 தினங்களில் உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: