• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

பெகாசஸ் விவகாரத்தில் ஐயத்திற்கு இடமின்றி அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக கூறப்பட்டுள்ளது

  • Share this:
    பெகாசஸ் ஒட்டு கேட்பு என்பது அனுமானத்தின் அடிப்படையிலான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே இந்த தவறான தகவல்களை ஆராய்ந்து களைய நிபுணர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

    இஸ்ரேலின் NSO நிறுவனம் தயாரித்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக் செய்ய பயன்படுத்தப்படும். இது பயங்கரவாதத்துக்கு எதிரான ஆயுதம் என்ற அடிப்படையில் அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வழங்கி வருகிறது. ஆனால் இந்த கருவி மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்திய தொலைத்தொடர்பு சட்ட விதிகளை மீறி, எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக செயற்பட்டாளர்கள், வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள், தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரி உள்ளிட்டோரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    Also Read : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது - நிர்மலா சீதாராமன்

    பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்க கோரி, தி ஹிந்து குழு தலைவர் என். ராம், ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரயின் தலைவர் சஷி குமார் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

    Also Read : ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடியில் கோவில் கட்டிய எம்.எல்.ஏ.

    அதில், பெகாசஸ் விவகாரத்தில் ஐயத்திற்கு இடமின்றி அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. சிறப்பு குழு அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும், அனுமானத்தின் அடிப்படையிலும், ஆதாரமற்ற ஊடக தகவல்களை கொண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் பரப்படும் பொய் தகவல்களை தடுத்து நிறுத்தவும், குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயவும் நிபுணர் குழு அமைக்கப்படும் எனவும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: