பெகாசஸ் விவகாரம் உண்மையாக இருந்தால் குற்றச்சாட்டுகள் கடுமையானவை - உச்ச நீதிமன்றம் காட்டம்

உச்ச நீதிமன்றம்

பெகாசஸ் கருவி மூலம் ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் விவகாரம் உண்மையாக இருந்தால், குற்றச்சாட்டுகள் கடுமையானவை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலம் செய்தியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள மிகவும் பிரபலமான 17 பத்திரிகைகளின் கூட்டமைப்பு இந்தியாவிலும் 300 பேரின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, தி ஹிந்து குழும தலைவர் என் ராம், ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிம் கல்லூரி தலைவர் சஷி குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி NV ரமணா, நீதிபதி சுர்ய காந்த் ஆகியோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் நகல்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அரசு எப்படி இந்த ஒப்பந்தத்திற்குள் வந்தது, யாருக்கு பணம் கொடுத்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க உத்தரவிடக் கோரினார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், பெகாசஸ் விவகாரம் 2019- ஆம் ஆண்டிலேயே வெளியான போதும், இரண்டு ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தை நாடுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    அப்போது குறுக்கிட்ட மனுதாரர்களின் மற்றொரு வழக்கறிஞர், பயங்கரவாதிகளின் போன்களை ஒட்டு கேட்பதை புரிந்துக் கொள்ளலாம். ஆனால் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும்போது மக்களை கண்காணிப்பது அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் பிரச்னை என கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாதங்களை கேட்ட நீதிபதிகள் பத்திரிகைகைளில் வெளியாகும் செய்திகள் உண்மையாக இருப்பின், குற்றச்சாட்டுகள் கடுமையானவை என தெரிவித்தனர். விசாரணையை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
    Published by:Karthick S
    First published: