ஏப்ரல் இறுதியில் கொரோனா 2ம் அலை உச்சகட்டத்தை எட்டும் - பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல்

ஏப்ரல் இறுதியில் கொரோனா 2ம் அலை உச்சகட்டத்தை எட்டும் - பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல்

பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல

என்ன நடக்கும் என்பதை விட இப்போது நாம் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்

  • Share this:
    கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை தனது பிடியில் வைத்திருக்கும் கொரோனா உயிர்கொல்லி வைரஸ் இந்தியாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் தற்போது அதிவேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பின் 2வது அலை காரணமாக இந்தியாவில் ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

    தற்போது நம்முன் இருக்கும் ஒரே கேள்வி இந்த நிலை எப்போது மாறும் அல்லது முடிவுக்கு வரும் என்பதே. இக்கேள்விக்கு சரியான விடை தரக்கூடியது இத்துறை சார்ந்த நிபுணர்கள் மட்டுமே.

    கொரோனா 2வது அலை எப்போது குறையத் தொடங்கும் என பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன் அளித்துள்ள பேட்டியில் கொரோனா 2ம் அலை குறித்து பல முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    விஜய்ராகவன் பேசுகையில், “நாட்டில் தற்போது மிக அதிக எண்ணிக்கையில் தினந்தோறும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இது மிகப்பெரிய கவலைதரக்கூடிய விஷயமாகும். ஆனால் உச்சகட்டம் மற்றும் வீழ்ச்சி என இரண்டுமே 12 வாரங்கள் என்ற அளவில் நீடிக்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டால் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் கொரோனா 2வது அலை சரிவை நோக்கி செல்லும் எனலாம்.

    இடைப்பட்ட காலத்தில் சில புதிய வகை கொரோனாவும் கண்டறியப்பட்டு வருகிறது, தற்போது சுகாதாரத்துறையின் ஒவ்வொரு நிலையையும் நாம் சரிசெய்ய வேண்டியுள்ளது. தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்துவதுடன், புதிய வகை கொரோனா குறித்த ஆராய்ச்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

    எனவே, என்ன நடக்கும் என்பதை விட இப்போது நாம் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். டெல்லியில் DRDO சார்பில் கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்று விரைவாக நிர்மானிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் அதுபோன்ற பல மருத்துவமனைகள் நிர்மானிக்கப்படும் என விஜய்ராகவன்தெரிவித்தார்.
    Published by:Arun
    First published: