சசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை: ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் உறுதி

சசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை: ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் உறுதி

சசிகலா

சசிகலாவிற்கு ஆக்சிஜன் செலுத்தி அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
    ஆமூச்சுத் திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆக்சிஜன் செலுத்தி அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை என்பது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    நள்ளிரவில் சசிகலாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பதாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும், இதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி அவருக்கு ஆக்சிஜன் அளவு 97 சதவீதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

    மேலும் படிக்க.... ஆக்சிஜன் அளவு குறைந்தது: சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

    இந்நிலையில், சசிகலாவைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவரின் உறவினர்களும், மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருக்கும் அமமுகவினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும் படிக்க... சசிகலா உடல்நிலையை அறிய டி.டி.வி.தினகரன் பெங்களூரு பயணம்

    அதன்படி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சசிகலாவை பார்ப்பதற்கு சிறைத்துறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அத்துடன், சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: