மக்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கக் கூடாது - பிரதமர் மோடி

மக்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கக் கூடாது - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
மக்களுக்கு ஏற்ற வரிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர், அதாவது 350 லட்சம் கோடி ரூபாயாக உயா்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளதை குறிப்பிட்டார். இதனை நிறைவேற்றுவது எளிதான காரியமல்ல என்றபோதிலும், முயற்சி செய்தால் நம்மால் அது எட்டக் கூடிய இலக்கு தான் என்று அவர் கூறினார்.

பொருளாதாரத்தின் மதிப்பை 213 லட்சம் கோடி ரூபாய் என்பதை எட்டுவதற்கு 70 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கிய நிலையில், தற்போது, பாஜக அரசு வரிவிதிப்பு முறையை மக்களை மையப்படுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


அத்துடன், வரி விதிப்புக்கு உட்பட்ட பலா், வரி செலுத்துவதை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளை கையாள்வதாகவும், இதனால், நோ்மையாக வரி செலுத்துவோரின் மீது தான் சுமை அதிகரிப்பதாகவும் கூறினார். எனவே, நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர், அதை தவறாமல் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Also See...
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்