Home /News /national /

பிரதமர் மோடியை புகழ்ந்து பழைய நிகழ்வுகளை பகிர்ந்த சரத் பவார்

பிரதமர் மோடியை புகழ்ந்து பழைய நிகழ்வுகளை பகிர்ந்த சரத் பவார்

Modi

Modi

பிரதமர் மோடி குறித்து பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை சரத் பவார் பகிர்ந்து கொண்டார்.

    இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி, மகாராஷ்டிராவில் அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறார்.

    சரத் பவாரின் 81வது பிறந்த தினத்தையொட்டி மராத்திய பத்ரிகையான லோக்சட்டா சார்பில் புனேவில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சரத்பவார், அப்பத்ரிகையின் ஆசிரியர் கிரிஷ் குபருடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி குறித்து பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

    சரத் பவார் பேசியவை....

    மகாராஷ்டிர தேர்தல் முடிவு வெளியான பின்னர் பாஜகவுக்கும், எங்கள் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மைதான். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கு மனக்கசப்பு இருந்தது, எனவே பாஜக எங்களை அணுகியது. கூட்டணி குறித்து நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். இருப்பினும் அது சாத்தியப்படாது என நான் அவரிடம் தெரிவித்தேன்.

    Also read:  இந்தியாவின் ரஃபேலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்!

    அஜித் பவார்:

    பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக்குவதற்காக அஜித் பவாரை நீங்கள் தான் அனுப்பி வைத்தீர்களா என கேட்கிறீர்கள். ஒரு முழுமையற்ற வேலையை நான் செய்ய மாட்டேன். அஜித் பவாரை நான் அப்படி அனுப்பி வைத்திருந்தால், அவர்கள் ஆட்சி அமைத்து அது தொடருவதை உறுதி செய்திருப்பேன்.

    மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது..

    நரேந்திர மோடி நிறைய கடின உழைப்பையும் நேரத்தையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்... தான் எடுத்த பணியை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு எடுத்துச் செல்வதில் அவர் நம்பிக்கை கொண்டவர். நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். இருப்பினும், பொது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் எல்லாமே வீண் தான். அது தான் பிரச்னை. கொள்கை முடிவுகளை வலுவாக செயல்படுத்துவதில் அவர் நம்பிக்கை கொண்டவர். மேலும் அவர் தனது அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் தனக்கே உரிய பாணியைக் கொண்டுள்ளார்.

    Also read:  2021ல் விலையேற்றம் அடைந்தவை.. தக்காளி முதல் சிலிண்டர் வரை.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களுள் என்னைத் தவிர யாருமே மோடியிடம் பேசத் தயங்குவார்கள். (மன்மோகன் அரசில் சரத் பவார் மத்திய அமைச்சராக இருந்தவர்) ஏனென்றால் மோடிஅந்த சமயம் மன்மோகன் அரசை வலிமையாக எதிர்த்து பேசிவந்தார்.

    மன்மோகன் அரசில் இருந்தவர்கள் சிலர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்தனர் என்பது உண்மைதான். ஆனாலும் நானும், மன்மோகன் சிங்கும் மோடிக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற ஒத்த கருத்து கொண்டிருந்தோம். ஏனென்றால் மோடி ஒரு மாநிலத்தின் முதல்வர், அவர் சார்ந்த கட்சியை பிடிக்காவிட்டாலும், அவரை பிடிக்காவிட்டாலும் மக்கள் தீர்ப்பை ஏற்று நாம் அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டங்களிலில் பேசியிருக்கிறேன்” இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Narendra Modi

    அடுத்த செய்தி