ஹோம் /நியூஸ் /இந்தியா /

சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி - கட்சி தொண்டர்களுக்கு தலைமை விடுத்த திடீர் அறிவிப்பு!

சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி - கட்சி தொண்டர்களுக்கு தலைமை விடுத்த திடீர் அறிவிப்பு!

சரத் பவார்

சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என அக்கட்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். அவருக்கு வயது 81.  அவருக்கு இன்று காலையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக அக்கட்சியின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு இன்று காலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சரத் பவார் மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நவம்பர் 2-ம் தேதி வரை தொடர்ந்து சரத் பவார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார். அதைத் தொடர்ந்து நவம்பர் 4, 5-ம் தேதிகளில் ஷீர்டியில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : “உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ” - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்!

  மேலும் மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Hospital, Political