ஹோம் /நியூஸ் /இந்தியா /

சினிமா பாணியில் கார்மேல் அமர்ந்து பயணித்த பவன் கல்யாண்.. வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!

சினிமா பாணியில் கார்மேல் அமர்ந்து பயணித்த பவன் கல்யாண்.. வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

அவர் சினிமா பட பாணியில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Guntur, India

  ஆந்திரா இப்டாம் கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், வீடு இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற ஜனசேன கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் காரின் மேற்கூறை மேல் பயணித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், சாலைப் பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்ல ஜனசேன கட்சி தலைவர் பவண் கல்யான் சென்றுள்ளார்.

  அப்போது அவர் சினிமா பட பாணியில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்தனர். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  பவன் கல்யாணின் செயலால் கடுப்பான போலீசார், அவரை தடுக்க முயன்றனர். சிறிது தூரம் முன் அவரது வாகனத்தை நிறுத்தி அவரை கீழே இறக்கினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சில கிலோ மீட்டர் நடந்தே சென்றுள்ளார் பவண் கல்யான்.

  இதையும் வாசிக்க: வீட்டில் தெலுங்கு பேசும் நீங்கள் அந்நியரா? நான் அந்நியரா? - முரசொலி கட்டுரைக்கு தமிழிசை விமர்சனம்! (news18.com)

  மேலும் அவர் கார் மீது அமர்ந்து பயணம் செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Andhra Pradesh, Pawan Kalyan