இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்த பவன் கல்யான்! ஜனசேனாவின் நிலை என்ன?

மூன்றாவதாக பவன் கல்யான் தலைமையினால் ஜனசேனா கட்சி தனித்து களமிறங்கியது. கடந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியை ஆதரித்த பவன்கல்யான் இந்தமுறை தனித்து போட்டியிட்டார்.

news18
Updated: May 23, 2019, 3:04 PM IST
இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்த பவன் கல்யான்!  ஜனசேனாவின் நிலை என்ன?
பவன் கல்யான்
news18
Updated: May 23, 2019, 3:04 PM IST
ஆந்திரப் பிரதேசத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தெலுங்கு நடிகர் பவன் கல்யான் பின்னடவைச் சந்தித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் இரண்டிலும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பெரும் வெற்றி பெறக்கூடிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. ஆந்திராவில் பிரதான கட்சியாக ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸும், தெலுங்கு தேசமும் இருந்தன.

மூன்றாவதாக பவன் கல்யான் தலைமையினால் ஜனசேனா கட்சி தனித்து களமிறங்கியது. கடந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியை ஆதரித்த பவன்கல்யான் இந்தமுறை தனித்து போட்டியிட்டார். குறிப்பிடத் தகுந்த வெற்றி பெறுவார். குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அவர் இரண்டு தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டார்.

மேற்கு கோதாவரியிலுள்ள பீமாவரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் கோதாவரி மாவட்டத்திலுள்ள கஜுவாகா ஆகிய இரு தொகுதிகளில் போட்டிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் மூன்றாவது இடத்தையே பெற்றுள்ளார். பெரும்பாலான தொகுதிகளில் அவருடயை கட்சி வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளனர்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Loading...
Also see:

First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...