பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

தெலுங்கு திரையுலக முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 2.17 லட்சத்தை கடந்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து இரண்டாவது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.

  இந்நிலையில், தெலுங்கு திரையுலக முன்னணி நட்சத்திரமும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது பண்ணை வீட்டிலே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுதொடர்பாக ஜனசேனா கட்சியின் செயலாளர் ஹரிபிரசாத்  ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து பவன் கல்யாணை அவரது குடும்ப மருத்துவரும், அப்போலோ மருத்துவமனை நிபுணர் குழுவினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

  முதலில் அவருக்கு கொரோனா பிரிசோதனை செய்த போது, பாதிப்பு இல்லை என்று முடிவு வந்த நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல்வழி இருந்ததால், இரண்டாவது முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், விரைவில் பவன் கல்யாண் உடல்நலம் பெற்று முழு உடல் ஆரோக்கியத்துடன் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் முன்பு தோன்றுவார் என்றும் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: