தேசப்பற்று இந்துக்களின் அடிப்படைஇயல்பு, குணாம்சம்: ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்

தேசப்பற்று இந்துக்களின் அடிப்படைஇயல்பு, குணாம்சம்: ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

“காந்திஜீயை நாங்கள் அபகரிக்க முயல்கிறோம் என்ற் கூறுகின்றனர், காந்தி போன்ற மிகப்பெரிய ஆளுமைகளையெல்லாம் யாரும் அபகரிக்க முடியாது."

  • Share this:
ஒருவர் ஹிந்து என்றால் அவருக்கு தேசப்பற்றை சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை தானாகவே இயல்பாகவே தேசப்பற்று இந்துக்களிடத்தில் இருக்கிறது. நாட்டுப்பற்று இந்துக்க்களின் அடிப்படை இயல்பு, குணாம்சம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

ஜே.கே. பஜாஜ், எம்.டி.ஸ்ரீநிவாஸ் எழுதிய "Making of a Hindu Patriot: Background of Gandhiji's Hind Swaraj", என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மோகன் பகவத் இவ்வாறு கூறினார்.

“காந்திஜீயை நாங்கள் அபகரிக்க முயல்கிறோம் என்ற் கூறுகின்றனர், காந்தி போன்ற மிகப்பெரிய ஆளுமைகளையெல்லாம் யாரும் அபகரிக்க முடியாது. இந்த நூல் மகாத்மா காந்தி பற்றி ஆய்வுபூர்வமான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது.

காந்தியைப் பொறுத்தவரையில் அவரது தர்மத்திலிருந்து நாட்டுப்பற்று உருவாகிறது, அதாவது தாய்மண் மீதான பற்று அவரது ஆன்மீகத்திலிருந்து உருவாவது.

அவரது நாட்டுப்பற்று அவர் தர்மத்திலிருந்து வருகிறது. தர்மம் என்பது வெறும் மதம் சம்பந்தப்பட்டதல்ல, மதத்தையும் விட பரந்துபட்டது.

இந்துக்கள் நாட்டுப்பற்று உடையவர்களாகவே இருக்க முடியும், இருக்க வேண்டும். இதுதான் இந்துக்களின் அடிப்படை குணாம்சம் அல்லது இயல்பு. சில வேளைகளில் அவர்களது நாட்டுப்பற்றை தட்டி எழுப்ப வேண்டியிருக்கும், ஆனால் ஒரு இந்துவாக இருப்பவன் இந்தியாவுக்கு எதிராக இருக்க முடியாது.

ஒருவர் தன் நாட்டின் மீது பற்று வைக்கிறார் என்றால் அது நிலம், மண் பற்றியது மட்டுமல்ல என்பதையும் நாம் தன்னுணர்வுடன் புரிவது அவசியம். மண் மட்டுமல்ல அது அந்நாட்டு மக்கள், நதிகள், பண்பாடு, மரபுகள், அனைத்தையும் நேசிப்பதுதான் நாட்டுப்பற்று.

இந்து மதம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. வித்தியாசம், வேறுபாடு என்பது பிரிவினை அல்ல, இந்து மதம் மதங்களுக்கெல்லாம் மதம் என்றார் காந்திஜீ” இவ்வாறு பேசினார் மோகன் பகவத்.

-பிடிஐ
Published by:Muthukumar
First published: