தேசப்பற்றும் தேசியமும் சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல: நன்னம்பிக்கை பேரணியில் விவசாயிகள்

குடியரசு தின வன்முறைக்குப் பிறகு தணியாத பதற்றம்.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா சிங்கு எல்லையிலிருந்து சோனிபேட் வரையிலான சாலையில் 16 கிமீ தூரம் நன்னம்பிக்கை அமைதிப் பேரணி நடத்தினர்.

 • Share this:
  தேசப்பற்றும் தேசியமும் சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று விவசாயிகள் அமைப்பின் தலைமை அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

  சம்யுக்த் கிசான் மோர்ச்சா இது தொடர்பாகக் கூறும்போது, இந்த போராட்டத்தை வன்முறை என்று அரசு திரும்பத் திரும்ப காட்ட விரும்புகிறது. ஆனால் விவசாயிகள் தெளிவாக உள்ளனர், போராட்டம் அமைதியான வழியிலேயே தொடரும் என்பதுதான் எங்கள் அணுகுமுறை.

  தீப் சித்து போன்ற சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்கிறது சம்யுக்த் கிசான் மோர்ச்சா.

  இந்நிலையில் குடியரசு தின வன்முறைச் சம்பவங்களையடுத்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா சிங்கு எல்லையிலிருந்து சோனிபேட் வரையிலான சாலையில் 16 கிமீ தூரம் நன்னம்பிக்கை அமைதிப் பேரணி நடத்தினர். இவர்கள் மூவர்ணக்கொடியுடன், “தேசப்பற்றும் தேசியமும் சிலருக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடக்கூடிய விஷயமல்ல, விவசாயிகளின் வீடுகளிலிருந்துதான் இந்தியாவுக்காக ராணுவ வீரர்களும் வந்துள்ளனர். விவசாயிகளும் தேசப்பற்றுடையவர்கள்தான்” என்று ஸ்பீக்கரில் பேசிய படியே வலம் வந்தனர்.

  மகளிர் விவசாய அமைப்பின் தலைவர் கவிதா குருகந்தி ஆங்கில நாளேடு ஒன்றிற்கு கூறும்போது, “அரசு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அடக்க முயற்சி செய்து வருகிறது. பல இடங்களில் சப்ளைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்புச் சாதனங்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

  அனைத்து எல்லைகளிலும் பாதுகாப்புப் படையினரை குவித்து வருகின்றனர், பல இடங்களில் போலீசார், கிராமத்தினர், நிர்வாகத்தினர் ஆகியோர் போராட்ட இடத்திலிருந்து விவசாயிகள் கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்” என்றார்.

  வியாழன் காலை மத்தியப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லி-ஆக்ரா பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். ஹரியாணா போலீஸ் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கிராமத்தினரிடமிருந்து தங்களுக்கு நெருக்கடி வருவதாக மத்திய தலைவர்கள் கூறியுள்ளனர்.

  இந்நிலையில் குடியரசு தின வன்முறைச் சம்பவங்களுக்காக நல்லெண்ண யாத்திரையை சம்யுக்த் கிசான் மோர்ச்சா நடத்தியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: