முகப்பு /செய்தி /இந்தியா / ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்க முடியாததால் நோயாளி உயிரிழப்பு...

ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்க முடியாததால் நோயாளி உயிரிழப்பு...

உயிரிழந்தவர் மீட்கப்பட்ட போது

உயிரிழந்தவர் மீட்கப்பட்ட போது

பொதுமக்கள் திரண்டு இவரை வெளியே எடுக்க முடியாமல் வாகனத்தின் ஜாக்கி கம்பிகள், கோடாரியை வைத்து அந்த ஆம்புலன்ஸின் கதவை அடித்து உடைத்து நோயாளியை வெளியே எடுத்தனர்.

  • Last Updated :
  • Kerala, India

அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவசர சிகிச்சைக்காக நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்றின், கதவுகள் திறக்க முடியாதபடி மாட்டிக்கொண்டதால் நோயாளி ஆம்புன்ஸிலேயே மாட்டிக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பரோக் பகுதியை சார்ந்த கோயா என்பவர் வாகன விபத்தில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது ஆம்புலன்ஸின் கதவுகள் திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டது. இதனால் நோயாளியை வெளியே எடுக்க முடியாமல் உறவினர்களும் ஆம்புலன்ஸ் டிரைவரும் திணறியுள்ளனர்.

top videos

    இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் திரண்டு இவரை வெளியே எடுக்க முடியாமல் வாகனத்தின் ஜாக்கி கம்பிகள், கோடாரியை வைத்து அந்த ஆம்புலன்ஸின் கதவை அடித்து உடைத்து நோயாளியை வெளியே எடுத்தனர். எனினும் அந்த நோயாளி ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த நிலையில், அவரை சடலமாகவே மீட்க முடிந்தது.

    First published:

    Tags: Died, Kerala, Kozhikode S11p05