முகப்பு /செய்தி /இந்தியா / துப்பாக்கி லைசென்ஸுக்காக விண்ணப்பிப்பவர்கள் 10 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் - ஆணையர் உத்தரவு

துப்பாக்கி லைசென்ஸுக்காக விண்ணப்பிப்பவர்கள் 10 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் - ஆணையர் உத்தரவு

துப்பாக்கி லைசென்ஸுக்கு மரக்கன்று நடவு

துப்பாக்கி லைசென்ஸுக்கு மரக்கன்று நடவு

10 மரக்கன்றுகளை நட்டு அதை ஒரு மாதம் வளர்த்துவந்த பின்பு தான் லைசென்ஸுக்காக விண்ணப்பிக்க முடியும் என நகராட்சி ஆணையர் சந்தர் கெந்த் வித்தியாசமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

  • Last Updated :

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நகராட்சியில், துப்பாக்கி லைசென்ஸுக்காக விண்ணப்பிக்கும் நபர்கள், 10 மரக்கன்றுகளை நட்டு அதை ஒரு மாதம் வளர்த்துவந்த பின்பு தான் லைசென்ஸுக்காக விண்ணப்பிக்க முடியும் என நகராட்சி ஆணையர் சந்தர் கெந்த் வித்தியாசமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பாட்டியாலாவில் வசிப்பவர்கள் துப்பாக்கி உரிமம் விரும்பினால் 10 மரங்களை நடவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், உரிமம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பதாரர்கள் 5 மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tress for Guna என்னும் இந்த முயற்சி பஞ்சாபில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதற்கும், மாநிலத்தில் வாழும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டுள்ளது.

காடுகளை அழிப்பதற்கு எதிரான போரில் குடிமக்களை ஒன்றிணைக்க விரும்பும் நகராட்சி ஆணையர் சந்தர், இந்த முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நட்டு வளர்க்கப்படும் ஒவ்வொரு மரக்கன்றுகளுடனும் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் செல்பி எடுக்க வேண்டும் என்றும் அதை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கெய்ன்ட் கூறியுள்ளார். ஒரு மாதத்திற்குப் பிறகு, விண்ணப்பதாரர் புதிய செல்ஃபி சமர்ப்பிப்பதன் மூலம் மரங்களின் நிலை குறித்து துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

சொந்த நிலத்தை வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் அதில் மரக்கன்றுகளை நடலாம், மற்றவர்களும் பொது இடங்களில் இதைச் செய்யலாம். கமிஷனர், சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் கல்வி நிறுவனங்கள், மத இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடலாம் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Forest deforestation, Gun, Punjab