ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலை மகர விளக்கு.. ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!

சபரிமலை மகர விளக்கு.. ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில்

Sabarimalai ayyapan temple | வானிலை நிலவரங்களை பார்த்துவிட்டு பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala | Pathanamthitta

  ஐயப்ப பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளதாக ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார்.

  மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா நமது நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக இருந்த கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பக்தர்கள் வானிலையை பார்த்து விட்டு வரவேண்டும் என்றும், பிளாஸ்டிக் உபயோகப்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

  மேலும், சபரிமலையில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 1,000 பணியாளர்களை நியமித்துள்ளதாக கூறிய அவர், பக்தர்கள் பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Ayyappan temple in Sabarimala, Kerala, Pathanamthitta S11p17, Sabarimalai Ayyappan temple