சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் - அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை நிலவும் நிலையில், சீனப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் - அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்
ராம் விலாஸ் பாஸ்வான்.
  • Share this:
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேரை சீன இராணுவம் கொன்ற பிறகு இரு நாட்டுக்கும் இடையே பிரச்னை மேலும் பெரிய அளவுக்கு உருவெடுத்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள சீனத் தூதரங்கம் முன்பும் கர்நாடகா முதலான வேறு சில இடங்களிலும் சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் கட்சியின் தலைவர்கள் பலர் சீனாவின் பொருட்களை வாங்க வேண்டாம் எனக் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், “சீனா இப்படி நடந்துகொள்வதற்காக நாம் அனைவரும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Also see:செய்தியாளர்களிடம், சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் இரண்டாம் தரமான சீனப் பொருட்கள் பற்றி கூறிய அவர், பிஐஎஸ் வரையறுத்த தர மதிப்பீட்டு விதிமுறைகளைப் பின்பற்றவுள்ளது. நம் நாட்டு உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவற்றை அவர்கள் சரிபார்க்கிறார்கள்.

இங்கிருந்து போகும் பாஸ்மதி அரிசி அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு உற்பத்தி பொருட்கள் இங்கு வரும்போது, கண்டிப்பான தர மதிப்பீட்டுக் கட்டுப்பாடு இல்லை என்றார்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading