6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர். பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் புதிதாக பரவி வரும் ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகாரிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை இந்திய செய்து வருகிறது. முகக்கவசம், தனி மனித இடைவெளிகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அரசு அறிவுறுத்தியது. அதன்படி, பரிசோதித்ததில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் மூலம் நோய் மேலும் பரவாமல் இருக்க அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சிஆர். பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொற்று பாதிப்புள்ள சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோர் பயணத்திற்கு 72 மணி நேரம் முன்னதாகவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவை மத்திய அரசின் 'ஏர் சுவிதா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona spread, COVID-19 Test, Flight travel