Home /News /national /

சுரங்க வழித்தடத்தில் சென்ற மெட்ரோ ரயிலில் தீ விபத்து

சுரங்க வழித்தடத்தில் சென்ற மெட்ரோ ரயிலில் தீ விபத்து

கொல்கத்தா மெட்ரோ ரயில்

கொல்கத்தா மெட்ரோ ரயில்

கொல்கத்தாவில் சுரங்க பாதையில் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால், 16 பேர் கடும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  • News18
  • Last Updated :
கொல்கத்தாவில், சுரங்க வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால், ரயில் சேவை மட்டுமின்றி, சாலை போக்குவரத்தும் கடுமையாக முடங்கியது.

கொல்கத்தாவின் ரவீந்திர சாதான் - மெய்தான் ரயில் நிலையங்களுக்கு இடையே, மெட்ரோ சுரங்க வழித்தடத்தில் சென்ற ரயிலில் என்ஜினுக்கு அடுத்தாற்போல் இருந்த பெட்டியின் உள்ளே தீப்பிடித்தது.

குளிர்சாதன பெட்டி என்பதால், அனைத்து இடங்களுக்கும் உடனடியாக பரவியதால், பெட்டியில் இருந்த பயணிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். இவர்களில் 16 பேர் கடும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து கொல்கத்தா மெட்ரோ ட்வீட் செய்திருந்தது.





அந்த பகுதியில் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிகப்பட்டிருந்தது. அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து கூடுதல் சேவைகளை மீண்டும் தொடங்கினர்.

Also see... சிறுமியுடன் 80 வயது அரசியல்வாதி பாலியல் சேட்டை... கேமராவில் 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kolkatta, Metro Rail

அடுத்த செய்தி