ரூ.18,000 கட்டணத்தில் விமானத்தில் தன்னந்தனியாக துபாய்க்கு பயணித்த பயணி!

விமானத்தில் நுழையும் போது தான் அவருக்கு தான் தன்னந்தனியாக பயணிக்கபோகிறோம் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

 • Share this:
  ரூ.18,000 கட்டணத்தில் 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் மும்பையைச் சேர்ந்த பயணி ஒருவர் தன்னந்தனியாக பயணித்துள்ளார்.

  மும்பையிலிருந்து துபாய்க்கு மே 19ம் தேதி புறப்பட்ட போயிங்777 ரக விமானத்தில் மும்பையைச் சேர்ந்த 40 வயது பாவேஷ் ஜாவேரி தனி ஒருவராக பயணித்துள்ளார். இவர் தனது விமானப் பயணத்துக்குச் செலுத்திய கட்டணம் வெறும் ரூ.18,000 மட்டுமே. 360 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளும் காலியாக இருக்க அவர் மட்டுமே தன்னந்தனியாக சென்றுள்ளார்.

  மிகவும் பரபரப்பான இரண்டு விமான நிலையங்களை இணைக்கும் இந்த விமான சேவையை அன்றாடம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகமாகும். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது.

  பாவேஷ் விமானத்தில் நுழையும் போது விமான பணிப்பெண்கள் அவரை கைத்தட்டி வரவேற்றுள்ளனர். அப்போது தான் அவருக்கு தான் தன்னந்தனியாக பயணிக்கபோகிறோம் என்ற விவரம் தெரியவந்துள்ளது. பாவேஷ் கடந்த 20 ஆண்டுகளில் மும்பை துபாய் இடையே 240 முறை விமான பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அடிக்கடி விமானம் பயணம் மேற்கொள்ளும் பாவேஷூக்கு முதல் முறையாக இப்படி ஒர் பயண அனுபவம் கிடைத்துள்ளது. இதுகுறித்து பாவேஷ் ஜாவேரி கூறும்போது, பணத்தால் அனுபவத்தை வாங்க முடியாது. நான் பலமுறை விமானத்தில் பயணம் செய்து இருக்கிறேன். ஆனால் இது தான் எனக்கு சிறந்த விமான பயணம் என்று விமானப்பணி பெண்ணிடம் கூறினேன்.

  அப்போது ஒரு விமான பணிப்பெண் என்னிடம், நீங்கள் தனியாக பயணம் செய்ய பயப்படுவீர்களோ என்று நினைத்தேன் என கூறினார். பின்னர் விமானி என்னிடம் வந்து, முழு விமானத்தையும் உங்களுக்கு நான் சுற்றி காட்டவா என்று கிண்டல் செய்தார். என்று தனது அனுபவத்தை தெரிவித்தார். தொடர்ந்து, தனக்கு 18ம் நம்பர் இருக்கை வேண்டும் என கேட்டுப்பெற்றதாகவும், அவருக்கு அந்த எண் ராசியானதாக அவர் கருதுவதாகவும் கூறினார்.

  தொடர்ந்து, பயணத்தின் போது விமானி அறிவிப்பு வெளியிடும் போது பயணிகள் கவனத்திற்கு என்று கூறுவதற்கு பதிலாக மிஸ்டர் ஜாவேரி விமானம் தரையிறங்கப்போகிறது. உங்களது சீட் பெல்டை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

  மும்பையிலிருந்து துபாய்க்கு போயிங் விமானத்தை இயக்க ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருளை செலவிட்டு ஒரே ஒரு பயணிக்காக இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. இந்த பயணி இல்லை என்றாலும், இந்த விமானம் இயக்கப்பட்டிருக்கும் என்று கூறிய ஊழியர்கள், துபாயிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக மறுமார்கத்தில் இந்த விமானம் செல்ல வேண்டிய தேவை இருந்தது என  தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: