• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இண்டிகோ விமானத்தில் ஏறிய பின்னர் 'தான் ஒரு கொரோனா நோயாளி' என கூறி சக பயணிகளை அதிர வைத்த நபர்!

இண்டிகோ விமானத்தில் ஏறிய பின்னர் 'தான் ஒரு கொரோனா நோயாளி' என கூறி சக பயணிகளை அதிர வைத்த நபர்!

இண்டிகோ

இண்டிகோ

பயணி ஒருவர் கேபின் குழுவில் இருந்த ஊழியர்களிடம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியதுடன் அதற்கான சான்றுகளையும் காட்டியுள்ளார்.

  • Share this:
புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி ஆவணங்களை காட்டியதால் சக பயனிகள் மற்றும் விமான கேபின் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இண்டிகோ விமானம் (6E-286) ஒன்று டெல்லியில் இருந்து புனேவிற்கு புறப்பட தயாராக ரன்வேயில் சென்று கொண்டிருந்தது. அச்சமயம் அதில் இருந்த பயணி ஒருவர் கேபின் குழுவில் இருந்த ஊழியர்களிடம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியதுடன் அதற்கான சான்றுகளையும் காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது தொடர்பாக உடனடியாக விமானியிடம் தெரிவித்தனர். விமானியும் உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு குழுவினரை தொடர்பு கொண்டு பேசி விமானத்தை மீண்டும் விமான நிலைய பார்க்கிங் பகுதிக்கு திருப்பினார்.

இது தொடர்பாக விமானத்தில் இருந்த பயணிகளிடம் பேசிய பைலட் நிலைமையை எடுத்துக் கூறியதுடன் சீட் வரிசை 6, 7 மற்றும் 8-ல் இருப்பவர்கள் முதலில் இறங்கிச் சென்று தனியாக நிறுத்தப்பட்டிருக்கும் கோச்சில் ஏறி தனிமை முகாமுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஏனெனில் அந்த வரிசை இருக்கைகளில் ஒன்றில் தான் பாதிக்கப்பட்டவர் அமர்ந்திருந்தார்.

இதனையடுத்து விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் கீழ் இறக்கப்பட்டு காத்திருப்பில் இருக்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் விமான இருக்கைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பயணிகள் அனைவருக்கும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் தரப்பட்டு விமானப் பயணம் முழுவதும் அதை அணிந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதன் பின்னரே விமானம் புனேவுக்கு புறப்பட்டு சென்றது.

இதனிடையே பாதிக்கப்பட்ட நபர் தெற்கு டெல்லியில் உள்ள Safdarjung மருத்துவமனையின் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார்.

உடனடியாக செயலாற்றி பயணிகளின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளித்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கும் அதன் கேபின் குழு ஊழியர்களுக்கும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: