முகப்பு /செய்தி /இந்தியா / ''ஜன்னலை திறங்க, நான் குட்காவை துப்பணும்'' - பறக்கும் விமானத்தில் கலாட்டா செய்த நபர் - வைரலாகும் வீடியோ

''ஜன்னலை திறங்க, நான் குட்காவை துப்பணும்'' - பறக்கும் விமானத்தில் கலாட்டா செய்த நபர் - வைரலாகும் வீடியோ

இன்டிகோ விமானத்தில் குட்காவை துப்ப ஜன்னலைத் திறக்க சொல்லும் பயணி

இன்டிகோ விமானத்தில் குட்காவை துப்ப ஜன்னலைத் திறக்க சொல்லும் பயணி

நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருக்கும்போது பயணி ஒருவர், ஜன்னலைத் திறங்க, நான் குட்காவை துப்பவேண்டும் என கலாட்டா செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில மாதங்களாக விமானங்களில் பயணிகள் மோசமாக நடந்துகொள்வது குறித்த செய்திகள் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இண்டிகோ விமானத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

சமீபத்தில் கோவிந்த் சர்மா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருக்கும்போது பயணி ஒருவர், ''ஜன்னலைத் திறங்க, நான் குட்காவை துப்பவேண்டும்'' என கலாட்டா செய்தார். இதனைக் கேட்ட சிப்பந்தி முதலில் அதிர்ச்சியானார். பின்னர் அவர் ஜாலியாக கேட்டார் என்பதை புரிந்துகொண்டு சத்தமாக சிரித்தார்.

பயணி யார் என்ற அடையாளம் வெளியிடப்படவில்லை. கோவிந்த் சர்மா என்பவர் பகிர்ந்த இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.


அண்மையில் பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானம் தரையில் இருக்கும்போதே இண்டிகோ விமானத்தில் அவசரக் கதவைத் திறந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Flight, Indigo