ஹோம் /நியூஸ் /இந்தியா /

நரிக்குறவர், குருவிக்காரர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்

நரிக்குறவர், குருவிக்காரர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்

நரிக்குறவர் சமூகத்தினர்

நரிக்குறவர் சமூகத்தினர்

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி, மக்களவையில் அமளியில் ஈடுபட்டன, இதனிடையே நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூடிய நிலையில், அருணாசலபிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி, மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. இதனால், தொடர்ந்து, மூன்று முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளில் அமளியில் ஈடுபட்டதால், வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அலட்சியம் வேண்டாம், மாஸ்க் அணியுங்கள்... பொது மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

 இதற்கிடையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதாவை, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஏற்கனவே, கடந்த வாரம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவிற்கு, திமுக மற்றும் அதிமுக சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, கொரோனா முனெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர்.

First published:

Tags: Lok sabha