Home /News /national /

குற்றப் பின்னணி வேட்பாளர்கள்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு

குற்றப் பின்னணி வேட்பாளர்கள்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு

குற்ற பின்னணி வேட்பாளர்கள்

குற்ற பின்னணி வேட்பாளர்கள்

குற்ற பின்னணியுள்ள  வேட்பாளரை தோ்வு செய்ததற்கான காரணத்தையும், குற்ற பின்னணி இல்லாத நபரை வேட்பாளராகத் தோ்வு செய்ய முடியாமல் போனதற்கான காரணத்தையும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    குற்றப் பின்னணி உடையவர்களை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் அரசியல் கட்சிகள், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலில் குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் போட்டியிடுவது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கட்சி பேதமில்லாமல் பிரதான அரசியல் கட்சிகளும் குற்ற பின்னணி உடைய நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்கிவருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்து அரசியல்கட்சிகள் நாளிதழில் விளம்பரம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    தற்போது, குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் மேலும் பிடியை இறுக்கியுள்ளது. பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்த்ரா நேற்று வெளியிட்டார்.

    அப்போது,  தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட வேட்பாளா்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவா்கள் மீதான குற்றத்தின் தன்மை ஆகியவற்றை அந்தந்த அரசியல் கட்சி வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சுஷீல் சந்திரா தெரிவித்தார்.  தேர்தல் ஆணையத்தின்  Know Your Candidate பக்கத்தில் வேட்பாளர்களின் தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு : உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு


    மேலும், தேர்வுக்கான காரணங்கள், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தகுதிகள், சாதனைகள் மற்றும் தகுதியைக் குறிப்பதாக இருக்க வேண்டும், வெற்றி வாய்ப்பை மட்டுமே கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வு இருக்க வேண்டும். குற்ற பின்னணியுள்ள  வேட்பாளரை தோ்வு செய்ததற்கான காரணத்தையும், குற்ற பின்னணி இல்லாத நபரை வேட்பாளராகத் தோ்வு செய்ய முடியாமல் போனதற்கான காரணத்தையும் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த தகவல்களை ஒரு பிராந்திய மொழி பத்திரிகை மற்றும் ஒரு தேசிய பத்திரிகையிலும்,  தங்களின்  ஃபேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். இந்தத் தகவல்களை வேட்பாளரைத் தோ்வு செய்த 48 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் படிங்க: விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக காங்கிரஸ் போராடும்' - உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

    Published by:Murugesh M
    First published:

    Tags: Chief Election Commissioner, Election commission of India, Elections

    அடுத்த செய்தி