ஹோம் /நியூஸ் /இந்தியா /

இன்று நிகழும் பகுதி நேர சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டுமா... லடாக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு

இன்று நிகழும் பகுதி நேர சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டுமா... லடாக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

மாலை 5:20 மணி வரை சூரிய கிரகணம் 55% காணக்கூடிய லே அரண்மனையில், சூரிய வடிப்பான் மூலம் சூரியனை நோக்கி ஒரு தொலைநோக்கி வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ladakh, India

அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் பகுதி சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ இருக்கிறது. ஒரு தசாப்தத்தில் இந்தியா முழுவதும் பகுதி சூரிய கிரகணம் காணப்படுவது இதுவே முதல் முறை மற்றும் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மீண்டும் காணப்படாது.

இதற்காக இந்திய வானியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு வானது நிகழ்வை கடைசி நொடி வரை படம்பிடிக்க தயாராகியுள்ளது. லடாக்கிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் ஹான்லேயில் எனும் பகுதி உள்ளது. இது சாங்தாங் பீடபூமியில் அமைந்துள்ளது. அங்கு வெப்பநிலை சுமார் -25 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது.

பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை சரியாக சீரமைக்கப்படாதபோது பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியன் அதன் மேற்பரப்பில் ஒரு சிறிய பகுதியில் இருண்ட நிழல் கொண்டதாக தோன்றுகிறது.  பகுதி சூரிய கிரகணத்தில் மூன்று கட்டங்கள் உள்ளன,  ஆரம்பம், உச்சநிலை அடைவது மற்றும் முடிவு ஆகியவை அடங்கும்.

சூரிய கிரகணம் நம் உடல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது...?

பெங்களூரு ஐஐஏ வை சேர்ந்த விஞ்ஞானி, டாக்டர் கிறிஸ்பின் கார்த்திக், இந்த பகுதி நேர சூரிய கிரகணத்தை பதிவு செய்ய நினைத்து ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளார். லடாக் பகுதியில் தொலைநோக்கி கொண்டு பகுதி நேர சூரிய கிரகணத்தை பதிவு சேயும் அவர் "கிரகண நிகழ்வுகளை கவனிக்க பெரிய தொலைநோக்கிகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை, மேலும் சிறிய தொலைநோக்கிகளை நம்பியிருக்கிறோம். கிரகணம் நிகழும் போது அதன் முழு வட்டையும் கைப்பற்றுவது சவாலாக இருக்கும், ”என்று கூறுகிறார்.முழு வட்டையும் காண சூரியனை நோக்கி திரும்பிய லென்ஸில் ஒரு சிறப்பு சோலார் வடிகட்டி வைக்கப்படும்.

பார்வை மற்றும் நேரம்

பகுதி சூரிய கிரகணம் மாலை 4:20 மணியளவில் தொடங்கி 5:20 வரை இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும். ஹான்லேயில், குழு சூரிய அஸ்தமன நேரத்தைக் கவனித்து, மாலை 5:08 மணி வரை தெரியும் என்று கணக்கிட்டது.

சூரிய கிரகணம் 2022 | என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது.!

ஹான்லேயில் இருந்து கிரகணத்தின் நேரடி ஒளிபரப்பை நடத்த இருக்கின்றனர். மாலை 5:20 மணி வரை சூரிய கிரகணம் 55% காணக்கூடிய லே அரண்மனையில், சூரிய வடிப்பான் மூலம் சூரியனை நோக்கி ஒரு தொலைநோக்கி வைக்கப்பட்டு பதிவு செய்வதையும் குழு உறுதி செய்துள்ளது.

ஹான்லேவில் பதிவு செய்யப்படும் பகுதி சூரிய கிரகணத்தை நேரலையில் இருந்து பாருங்கள்

' isDesktop="true" id="824340" youtubeid="evJBhD-Oigc" category="national">

சென்னை உள்ளிட்ட தமிழக பகுதியில் வெறும் 8% சூரிய கிரகணத்தை மட்டுமே காண முடியும். மாலை நேரம் அந்தி சாயும் நேரம் கிழக்கு வனத்தில் இது தெரியும். அனால் மக்கள் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம். தமிழகத்தில் மாலை 5 :14 முதல் 5: 44 வரை தெரியும். அதன் பின்னர் சூரியன் மறைந்துவிடும். மேற்கு அடிவானத்தின் தெளிவான காட்சியைப் பெற விரும்புவோர் சோலார் கண்ணாடிகள் அல்லது வெல்டர் கண்ணாடிகள் (நிழல் எண் 14) மூலம் நிகழ்வைப் பார்க்கலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Eclipse, Ladakh, Solar eclipse