₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சி

பீகாரில் ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சி
Photo: Majid Alam/Twitter
  • Share this:
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் கந்தக் ஆற்றின் குறுக்கே 264 கோடி ரூபாய் செலவில் சத்தர்காட் பாலம் கட்டப்பட்டது. 8 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி இந்த பாலத்தை முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிலையில் பீகாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த பாலம் இடிந்து விழுந்தது. மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஒரே மாதத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read... இந்திய - சீன எல்லைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம்


இது நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading