முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தியுள்ளன.

இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து எம்.பிக்களும் கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியிகியுள்ளன.

இந்நிலையில், நேற்று மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமயில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என நாங்கள் எதிர்பார்த்தோம். விவசாய சட்டங்கள் வேறு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்படலாம் என சில அச்சங்கள் எழுந்துள்ளதால், அது குறித்து கூடுதல் தகவல்களை கேட்க நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.

Must Read : Omicron  தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? - ராதாகிருஷ்ணன் விளக்கம்

இந்த கூட்டத்தில் 31 கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்செய் சிங் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இன்று தொடங்கி நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Agricultural act, Narendra Modi, Parliament Session