வெறுப்பு பதிவுகள் விவகாரம் - நாடாளுமன்ற நிலைக்குழு முன் பேஸ்புக் அதிகாரிகள் இன்று ஆஜர்

பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று ஆஜராக உள்ளனர்.

வெறுப்பு பதிவுகள் விவகாரம் - நாடாளுமன்ற நிலைக்குழு முன் பேஸ்புக் அதிகாரிகள் இன்று ஆஜர்
கோப்புப்படம்
  • Share this:
இந்துத்துவ அமைப்புகளின் நிர்வாகிகள் வெளியிடும் அவதூறு கருத்துகளை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகையில் செய்தி வெளியானது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது.

இதனடிப்படையில் இன்று பேஸ்புக் அதிகாரிகள் ஆஜராக உள்ளனர். இதனிடையே பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் படிக்க...திருப்பதியில் செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது


அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ள அவர், பிரதமரை பேஸ்புக் ஊழியர்கள் களங்கப்படுத்துவதாகவும், சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவர்களது செயல்பாடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading