முகப்பு /செய்தி /இந்தியா / Monsoon session today | பரபரப்பான சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்..

Monsoon session today | பரபரப்பான சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்..

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுதொடங்கும் நிலையில், முன்னதாக அனைத்துக்கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் வேளாண் சட்டங்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து எதிர்கட்சிகள் குரல்கள் எழுப்பின. அப்போது பேசிய பிரதமர் மோடி, அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தொடரில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியீடு...

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, 19 நாட்களில் நடைபெறும் கூட்டத்தொடரில் 31 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், இதற்கு காலம் இடம்தராது என்றும் கூறினார்.

First published:

Tags: Parliament Session