ஹோம் /நியூஸ் /இந்தியா /

குளிர்கால கூட்டத்தொடர்.. ஒருநாள் கூட மாநிலங்களவை செல்லாத இளையராஜா..!

குளிர்கால கூட்டத்தொடர்.. ஒருநாள் கூட மாநிலங்களவை செல்லாத இளையராஜா..!

இளையராஜா

இளையராஜா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி இளையராஜாவின் வருகைப் பதிவு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.  13 நாட்கள் வரை நடைபெற்ற கூட்டத்தொடரில்  மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்தில் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா  கூட்டத்தொடரின் ஒருநாள் கூட கலந்துகொள்ளவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது.

First published:

Tags: Ilaiyaraja, Parliament Session, Rajya Sabha