ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: முன்கூட்டியே இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: முன்கூட்டியே இன்றுடன் நிறைவு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மக்களவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், கூட்டத் தொடரை இன்று முதல் காலவரையின்றி ஒத்திவைக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கிய நிலையில், 29ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற இருந்தது. கூட்டத் தொடரின்போது இந்திய - சீன எல்லையில் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் மக்களவை 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், கூட்டத் தொடரை இன்று முதல் காலவரையின்றி ஒத்திவைக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தகவலை மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Read More : அலட்சியம் வேண்டாம், மாஸ்க் அணியுங்கள்... பொது மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

இதேபோல மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். கிறிஸ்துமஸ், பொங்கல் என வரவுள்ள பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், கொரோனா பரவலை நினைவூட்டி விழிப்புடன் இருக்கும்படி எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: Delhi, Parliament, Parliament Session