Home /News /national /

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடக்கம்... வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடக்கம்... வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல்

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 23-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. நாளை தொடங்கும் கூட்டத் தொடரில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    3 சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு காலமாக நடந்த போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளுக்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    நாளை தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் சட்ட ரத்து மசோதாவில், 'சிறிய அளவிலான விவசாய குழுக்கள் மட்டுமே சட்டங்களை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அரசு எதிர்பார்க்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து தனிநபர் அந்தரங்க உரிமை மசோதா 2019 நாளை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், சில அவசர சட்டங்களுக்கு பதிலாக போதைப் பொருள் தடுப்பு மசோதா, மத்திய கண்காணிப்பு கமிஷன் திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் உருவாக்க திருத்த மசோதா ஆகியவையும் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளன. கடைசி 2 மசோதாக்கள் சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு கமிஷனரின் பதவிக் காலத்தை நீட்டிக்க வகை செய்யும்.

    இதற்கிடையே இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், 'பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அவரிடம் வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் பெற திட்டமிட்டிருந்தோம்' என்றார். இந்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்களை நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதேபோன்று விவசாயிகளுக்கு பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை கொண்டு வரும் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    Published by:Musthak
    First published:

    Tags: Parliament

    அடுத்த செய்தி