முகப்பு /செய்தி /இந்தியா / அதானி விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அதானி விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

Parliament were adjourned for the day | அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்தது ஏன் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது, அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்தது ஏன் என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் 2 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால், நாளை காலை 11 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

First published:

Tags: Delhi, Lok sabha