நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

கோப்புப் படம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், 47 மசோதாக்களை விவாதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி அக்டோபர் மாதம் 1 வரை நடைபெறவுள்ளது. கொரோனா தொற்றால் இந்த முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், காகித பயன்பாட்டைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

  நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவரின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட இருப்பதோடு, 257 எம்.பி.க்கள் சபையின் பிரதான மண்டபத்திலும், 172 எம்.பி.க்கள் பார்வையாளர்கள் மாடத்திலும் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை நடவடிக்கைகளை உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், எல்.ஈ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  மேலும், பூஜ்ஜிய நேரங்களின் காலமும் அரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது, கேள்வி நேரம் இருக்காது என்றாலும், எழுதப்பட்ட கேள்விகளைக் கேட்கலாம் என்றும், அவற்றுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 4 மணி நேரமே அவை நடக்கும். காலை 9 மணி முதல் 1 மணி வரை மாநிலங்களவையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை மக்களவையும் நடைபெறவுள்ளன.

  18 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் 18 அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் நிதி தொடர்பான 2 விவகாரங்கள் உள்பட 47 மசோதாக்களை விவாதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொற்று நோய் திருத்த மசோதா உள்பட 11 முன்வரைவுகள் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன. முதல் நாளான இன்று மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவை ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.

  படிக்க...மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து - முதல்வர் நாராயணசாமி  அதே நேரத்தில், மருத்துவ சோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், ராகுல் காந்தியும் அவருடன் சென்றுள்ளார். இதனால், இருவரும் இன்றையக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: