ஒரு வாரமாக முடங்கியுள்ள நாடாளுமன்றம்

news18
Updated: March 13, 2018, 10:20 PM IST
ஒரு வாரமாக முடங்கியுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
news18
Updated: March 13, 2018, 10:20 PM IST
எதிர்க் கட்சிகளின் தொடர் அமளி காரணமாக  நாடாளுமன்றம் கடந்த ஒரு வாரமாக முடங்கியுள்ளது.

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில்,  கடந்த ஒரு வாரமாக  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியும்  பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றன. இதேபோல், ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி அமளியில் ஈடுபட்டு வருகிறது. காவிரி பிரச்னை தொடர்பாக அதிமுகவும், திமுகவும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் கூடிய சிறிது நேரத்தில் மதியம் வரையும், பின்னர் நாள் முழுமைக்கும்  ஒத்திவைக்கப்படுகின்றன. இதனால், இரு அவைகளிலும் முக்கிய அலுவல்கள் முடங்கியுள்ளன.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்