முகப்பு /செய்தி /இந்தியா / எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி : மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி : மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

Parliament Monsoon Session :எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து காலையில், காங்கிரஸ் மற்ரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். மக்களவை கூடியதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்ப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், 2 மணி வரையில் அவை நடவடிக்கைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து அவை கூடி தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ALSO READ | சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட எங்களுக்குத் தெரியும்- மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

 விலைவாசி உயர்வு, புதிய ஜிஎஸ்டி மற்றும் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கைகள் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அவை கூடியபோது, விதிகளை மீறியதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங்கை, ஒருவாரத்திற்கு இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவை துணை தலைவர் அறிவித்தார்.

இதனால் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், மேலும் 18 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு அவை கூடியபோது, கூச்சல் குழப்பம் நிலவியதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

First published:

Tags: Parliament, Parliament Session