• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 29ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்: பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்

29ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்: பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

  • Share this:
    29ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் கூடுகிறது. அன்று இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என்று 3 தொடர்கள் நாடாளுமன்றத்தில் நடைபெறுவது வழக்கம்.

    ஆனால், கொரோனா பரவல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இல்லை. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல் நடைபெற இருக்கின்றது.

    மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இம்மாதம் 29-ஆம் தேதி கூட இருப்பதாக அறிவித்தார். இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்றைய தினம் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடிரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தாக்குதல் இல்லை என்று கண்டறியப்படுகிற உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

    உறுப்பினர்களுக்கு அவர்களது வீடுகளின் அருகிலேயே கொரோனாவை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இந்த பரிசோதனை இம்மாதம் 27, 28 ஆகிய இரு நாட்களில் நடைபெறும் என்றும், எம்.பி.க்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளாதவும். மத்திய, மாநில அரசுகளால் இறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி கொள்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    நாள்தோறும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாநிலங்களவை செயல்படும் எனவும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் மக்களவை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே கேள்வி நேரம் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அமர்வுகளாக நடைபெறும். முதல் அமர்வு ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி முடியும்.

    இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவு பெறும். இந்நிலையில், நாடாளுமன்ற கேண்டீன்களில் உணவு வகைக்கு எம்.பி.க்களுக்கும், பிறருக்கும் வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: