எதிர்ப்புகளை மீறி சட்டவிரோதச் செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..!

இச்சட்ட திருத்தம் மூலம் எந்தவொரு தனி நபரை வேண்டுமானலும் அரசு நினைத்தால் தீவிரவாதியாக மாற்ற முடியும்.

Web Desk | news18
Updated: August 2, 2019, 4:39 PM IST
எதிர்ப்புகளை மீறி சட்டவிரோதச் செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்..!
அமித் ஷா
Web Desk | news18
Updated: August 2, 2019, 4:39 PM IST
சட்டவிரோதச் செயல் தடுப்பு சட்ட திருத்த மசோதா பல எதிர்ப்புகளையும் மீறி இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

UAPA என்னும் சட்டவிரோதச் செயல் தடுப்பு சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்களைவையில் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு துணை நிற்கும் தனி நபர் அல்லது ஒரு இயக்கத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழும். மேலும், இச்சட்டத் திருத்த மசோதா மூலம் தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கான பலம் அதிகரிக்கும்.

மாநிலங்களவையில் இச்சட்ட திருத்த மசோதாவுக்கு இன்று கடும் எதிர்ப்பு எழுந்தது. இச்சட்ட திருத்தம் மூலம் எந்தவொரு தனி நபரை வேண்டுமானலும் அரசு நினைத்தால் தீவிரவாதியாக மாற்ற முடியும். இதனால் அரசு எதிராகப் பேசும் அப்பாவி மக்கள் கூட பாதிக்கப்படுவர் என எதிர்கட்சிகள் விமர்சித்தனர்.


இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு பலமான சட்டமாக இது இருக்கும். பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பவர்களும் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவர். எந்த ஒரு சூழலிலும் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது” என்றார்.

”ஒரு பயங்கரவாத இயக்கத்தை தடை செய்தால், அதில் இருக்கும் நபர்கள் வேறு இயக்கத்தை தொடங்குகின்றனர். இதனை தடுக்க இந்தச் சட்டம் தேவை” என்றும் அமித் ஷா பேசினார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதால், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், இது சட்டமாகும்.

Loading...

மேலும் பார்க்க: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய மருத்துவ ஆணைய மசோதா!
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...