தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக 5-வது ஆண்டாக பிரதமர்
மோடி மாணவர்களுடன் உரையாற்றினார்.
பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், 5வது ஆண்டாக இன்று டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்சா நிகழ்வின் மீது காட்டப்படும் பேரார்வம் தனித்துவமானது. லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய மதிப்பிற்குரிய அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவை பகிர்ந்துள்ளனர். இதில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.