Home /News /national /

ஆண்களிடம் அதிகம் பேசியதால் 11 வயது மகளை கால்வாயில் தள்ளிய பெற்றோர் கைது

ஆண்களிடம் அதிகம் பேசியதால் 11 வயது மகளை கால்வாயில் தள்ளிய பெற்றோர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சம்பவம் நடந்து 4 நாள்கள் ஆன நிலையில், கால்வாய் கரைகளில் சிறுமியை தேடும் பணியில் காவல்துறை ஈடுபடுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Meerut, India
    ஆண் நண்பர்களுடன் அதிகம் பேசிய ஆத்திரத்தில் தனது மகளை பெற்றோர் கால்வாயில் தள்ளிய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கங்காநகர் பகுதியில் வசிப்பவர் பப்லு மற்றும் ரூபி தம்பதி. இவர்கள் 5ஆம் வகுப்பு படிக்கும் தங்களின் 11 வயது மகளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

    அருகே உள்ள பஜாருக்கு சென்று வரும் போது மகள் தொலைந்துவிட்டால் என அவர்கள் காவல்துறை புகாரில் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அந்த சிறுமி பெற்றோருடன் தான் பஜாரில் இருந்தது தெரியவந்துள்ளது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் காவல்துறைக்கு சந்தேகம் வலுக்கவே, பெற்றோரை மட்டும் அல்லாது மாயாமான சிறுமியின் உடன் பிறந்தவர்களையும் விசாரித்துள்ளனர்.அப்போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியை கொலை செய்யும் நோக்கில்  பெற்றோரே செப்டம்பர் 1ஆம் தேதி அன்று நதி கால்வாயில் தள்ளிவிட்டுள்ளனர். அந்த சிறுமி அதிகமாக ஆண்களிடம் பேசுவதும், நீண்ட நேரம் போன் பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் பெற்றோருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெங்களூரு மழை வெள்ளத்தால் 5 மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்த ஊழியர்கள்.. ரூ.225 கோடி இழப்பு என நிறுவனங்கள் தகவல்

    பெற்றோர் கண்டித்தும் சிறுமி போக்கை மாற்றிக்கொள்ளாததால் ஆத்திரத்தில் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை பெற்றோரும் இறுதியில் காவல்துறையிடம் ஒத்துக்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்து 4 நாள்கள் ஆன நிலையில், கால்வாய் கரைகளில் சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Attempt murder case, Crime News, Uttar pradesh

    அடுத்த செய்தி