• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மாணவியிடம் பாலியல்துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்- அடித்து துவைத்து காவல்துறையில் ஒப்படைத்த பெற்றோர்

மாணவியிடம் பாலியல்துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்- அடித்து துவைத்து காவல்துறையில் ஒப்படைத்த பெற்றோர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆந்திரப் பிரதேசத்தில் மாணவியிடம் பாலியல் சீண்டலில ஈடுபட்ட தலைமை ஆசிரியரை பெற்றோர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

  • Share this:
    நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது தொடர்கதையாக இருந்துவருகிறது. தற்போது நிறைய பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் தொல்லை நடப்பது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. தற்போது ஆந்திராவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா பகுதியில் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருபவர் சிவாரெட்டி. அதே பள்ளியில் 8 வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கண்ணீர் மல்க கூறி அழுதுள்ளார். பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறுவதற்கான காரணம் பற்றி பெற்றோர் அந்த மாணவியிடம் நடத்திய விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குறித்து கூறினார்.

    அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அந்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை பிடித்து தர்ம அடி கொடுத்து தரதரவென இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலைமையாசிரியர் சிவா ரெட்டியை கைது செய்த போலீசார் அவர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: