Home /News /national /

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: பெற்றோர் கைதான பரபரப்பு பின்னணி

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: பெற்றோர் கைதான பரபரப்பு பின்னணி

கோப்புப் படம்

கோப்புப் படம்

குற்றம் சாட்டப்பட்ட பெற்றோர் மீது ஐபிசி பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி மற்றும் பிரிவு 317-ன் கீழ் குழந்தையை கைவிட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India
அகமதாபாத்: சபர்கந்தாவின் ஹிம்மத்நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பிறந்து ஒரே நாளான பெண் குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை விசாரணைக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஜிதேந்திரசிங் தாபி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, கடந்த வியாழக்கிழமை அன்று கம்போய் கிராம மக்களால் மீட்கப்பட்டது. குழந்தை தற்போது ஹிம்மத்நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தையின் பெற்றோரை கைது செய்தனர். கம்போய் தாலுகாவில் உள்ள சாமுண்டாநகரைச் சேர்ந்த ஒரு தம்பதி வியாழக்கிழமை காலை முதல் தலைமறைவானதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். தேடுதல் வேட்டையில், அன்று இரவே நந்தாசன் பகுதியில் இருந்த அவர்களைக் கைது செய்தனர். விசாரணையில், வியாழக்கிழமை அதிகாலை அந்த பெண்ணுக்கு குறைப்பிரசவம் ஆனது தெரியவந்தது. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததாலும், முன்கூட்டிய பிரசவம் மற்றும் பொருளாதார நிலையை காரணம் காட்டி கணவன், மனைவி இருவரும் குழந்தையை கைவிட முடிவு செய்தனர். மேலும், குழந்தையை தங்கள் வீட்டின் பின்புறமுள்ள விவசாய நிலத்தில் புதைக்க திட்டமிட்டு இந்த குற்றச் சம்பவத்தை செய்துள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பெற்றோர் இருவர் மீதும் ஐபிசி பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி மற்றும் பிரிவு 317-ன் கீழ் குழந்தையை கைவிட்டதற்காக கம்போய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Published by:Archana R
First published:

Tags: Gujarat, New born baby

அடுத்த செய்தி