Home /News /national /

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பப்பூவா நியூகினியா வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பப்பூவா நியூகினியா வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு சந்திப்பு

திரவுபதி முர்முவுடன் விஷ்ணு பிரபு

திரவுபதி முர்முவுடன் விஷ்ணு பிரபு

து குடியரசுத் தலைவருக்கு உலகப்புகழ் பெற்ற ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்களை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு பிரபு.

    பப்பூவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு  இந்திய நாட்டின் 15 - வது குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். அப்போது,  தமிழக பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என்ற புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினார்.

    இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு ஜூலை 25ம் தேதி பதவியேற்றார். பல்வேறு முக்கிய பிரபலங்களும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பப்பூவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் குறிப்பிட வேண்டிய விஷேசம் என்னவென்றால் பப்புவா நியூ கினியாவை பொறுத்தவரை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்பது தான். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்பின் போது குடியரசுத் தலைவருக்கு உலகப்புகழ் பெற்ற ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்களை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு பிரபு.

    இதையும் படிங்க: ராஜஸ்தான் தாரா காட்ஸ் வனப்பகுதியில் ரம்மியமாக செல்லும் ரயில்.. வைரலாகும் வீடியோ

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க தோடர் சமுதாயத்தினர் தயாரிக்கும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை ஒன்றும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும்,  தமிழக பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என்ற புத்தகத்தையும் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது, பப்புவா நியூ கினியா நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Draupadi Murmu, India, Papua New Guinea, President

    அடுத்த செய்தி