முகப்பு /செய்தி /இந்தியா / நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தேவையில்லாத பீதி நிலவி வருகிறது - மத்திய அமைச்சர் விளக்கம்

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தேவையில்லாத பீதி நிலவி வருகிறது - மத்திய அமைச்சர் விளக்கம்

மின் பாதிப்பு

மின் பாதிப்பு

கையிருப்பில் நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாடு வராது என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தலைநகர் டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதற்கு மத்தியில், நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தேவையில்லாத பீதி நிலவி வருவதாகவும், கெயில் மற்றும் டாடா நிறுவனத்தில் இருந்து வரும் தவறனான தகவலே இதற்கு காரணம் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 10 முக்கிய நகரங்களில் தினமும் ஒருமணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாபில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் ஆந்திராவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தேசிய தலைநகரில் மின்நெருக்கடி ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இதேபோல், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் கடிதம் எழுதியுளார்.

முன்னதாக இன்று, அனல்மின் நிலையங்களில் போதிய நிலக்கரி இருப்பில் இல்லாததால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வரும் வாய்ப்புகள் இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பதாகவும், மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் பேட்டியளித்தார். அப்போது, நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது. 4 நாட்களுக்கு கையிருப்பு உள்ள நிலையில் தினமும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்து நிலக்கரி அனுப்புவதாக கெய்ல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை; இனியும் இருக்காது. மேலும் நிலக்கரி இருப்பு தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தொடர்ந்து பேசிவருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

First published:

Tags: Delhi, PM Modi, Powercut