கொரோனா அச்சுறுத்தல்: பொருட்களை அதிகமாக வாங்கிக் குவிப்பவர்கள் கவனத்துக்கு..! #PanicBuying

தனிமனித பொறுப்புடன் செயல்படுங்கள். பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கு முன்பாக இருமுறை சிந்தியுங்கள்..!

கொரோனா அச்சுறுத்தல்: பொருட்களை அதிகமாக வாங்கிக் குவிப்பவர்கள் கவனத்துக்கு..! #PanicBuying
கோப்புப் படம்
  • Share this:
#PanicBuying எனப்படும் பதற்றமாக பொருட்களை வாங்கும் பழக்கம் உடையவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இவை..!

சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சானிட்டைஸர்களுக்கு பற்றாக்குறை நிலவியது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தபோது அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலைமைக்கு மக்களின் தேவைக்கு அதிகமாகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பதற்றமான குணமே காரணம் என்று சொல்லப்பட்டது.

144 அறிவிக்கப்பட்ட பிறகும் கூட பொருட்களை வாங்கிவிடும் பிரயத்தனத்தில் கண்ணில் பட்ட எல்லாவற்றையும் வாங்கி நிரப்பிக்கொண்டும் விநோதமான பழக்கத்துக்கு பலர் ஆளாகியிருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் இப்படியான பொருட்கள் வாங்கிக் குவிக்கும் பழக்கத்தால், மிக அவசரத் தேவையில் இருப்பவர்களுக்கு பொருட்களே கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும் வாய்ப்புள்ளது.


1. அதிக விலை கொடுத்து இருக்கும் பொருட்களை நீங்கள் வாங்கும்போது, வாங்கும் திறனற்ற சாமானியர்களுக்கு நீங்கள் மிகப்பெரும் சுமையைக் கொடுக்கிறீர்கள்.

2. அவசியத் தேவையில்லாத பொருட்களை பட்டியலிட்டுக் கொள்ளாமல், எந்த சிந்தனையுமின்றி வாங்குவதால், அத்தியாவசியமான ஒன்றை நீங்கள் தவர விடலாம்.

3. பதற்றப்பட்டு நீங்கள் பொருட்கள் வாங்கும் தன்மையை உணர்ந்தால், பதுக்கல் நடக்கவும் வாய்ப்புண்டு.அதிகரிக்கும் விலையேற்றத்தால் பணப்புழக்கம் குறையும். செயற்கையான தட்டுப்பாடும், மக்களின் வாங்கும் திறனும் குறையும். பதற்றம் காரணமாகவும், வதந்திகளை நம்புவதாலும் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் அதிக பணத்தை வங்கிக் கணக்குகளிலிருந்து அளவுக்கு அதிகமாக எடுத்து வீட்டில் வைத்துள்ளனர். இதனால் ரூபாய் நோட்டுக்களுக்கும் சிரமம் ஏற்படலாம்.

தனிமனித பொறுப்புடன் செயல்படுங்கள். பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கு முன்பாக இருமுறை சிந்தியுங்கள்..!

https://tamil.news18.com/news/tamil-nadu/sanitary-workers-speaks-on-their-issues-and-1-work-mg-272333.html
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading