• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ச்சீ.. சிறுநீரைப் பிடித்து, தண்ணீரில் கலந்த பானிபூரி விற்பனையாளர்.. அதிர்ச்சி வீடியோ

ச்சீ.. சிறுநீரைப் பிடித்து, தண்ணீரில் கலந்த பானிபூரி விற்பனையாளர்.. அதிர்ச்சி வீடியோ

பானிபூரி விற்பனையாளர்

பானிபூரி விற்பனையாளர்

அசாம் மாநிலம் கௌகாத்தியில் சிறுநீரை தண்ணீரில் கலந்த பானிபூரி விற்கும் அந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுகாதாரமான உணவு, சுகாதாரமான வாழிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பது குறித்து வாதங்கள் நீண்ட காலமாக இருந்துவருகின்றன. அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதிப்படுத்துவதை நோக்கி உலகம் பயணித்துவருகிறது. இருப்பினும், இந்தியா போன்ற மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஏழை நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்குமான சுகாதாரத்தை உறுதி செய்வது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்துவருகிறது. சாலையோர உணவுகள் என்பது இந்தியா மட்டுமல்ல உலக அளவிலும் அது ஒரு கலாச்சாரமாகவே இருந்துவருகிறது.

    விலை மலிவு என்பதைக் கடந்து நவீன உயர்ரக உணவுகள் கூட சாலையோர உணவுமுறையை நோக்கி நகர்கின்றன. பொதுமக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் வரவேற்புதான் அதற்கு காரணம். இருப்பினும், சாலையோர உணவு முறைகளில் சுகாதாரம் என்பது எந்த அளவுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது என்பது கேள்விக் குறியாகவே இருந்துவருகிறது. குறைந்தபட்ச சுகாதாரம் கூட இல்லாமல் மிக அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் குறித்து வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன.

    சாலையோரக் கடைகள், மலிவு விலை கடைகள் மட்டும் என்றில்லாமல் உயர்ரக உணவகங்களில் கூட கெட்டுப்போன மாமிசங்களைப் பயன்படுத்தி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.


    ஒரு சில வருடங்களுக்கு முன்னர், பொதுக் கழிப்பிடத்திலுள்ள பைப்பிலிருந்து தண்ணீரைப் பிடித்து சமையலுக்கு பயன்படுத்திய சாலையோரக் கடையின் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில், பானிபுரி கடை நடத்தும் நபர் வேலை செய்துகொண்டே சிறிய கப்பில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி தொழிலுக்கு பயன்படுத்தும் நீரில் கலக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், சாலையோர கடைகளில் உணவு உண்ண விரும்புபவர்கள் மத்தியில் இது பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: