முகப்பு /செய்தி /இந்தியா / Ladakh Border| லடாக் எல்லை பகுதியில் இருந்து வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்

Ladakh Border| லடாக் எல்லை பகுதியில் இருந்து வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்

லடாக்

லடாக்

லடாக் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய - சீன படைகள் வெளியேறியது தொடர்பான வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :

லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சீன ராணுவம் படைகளை குவித்தது. இருதரப்புக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். ராணுவ கமாண்டர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதன்படி, படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது தொடர்பான வீடியோக்களை இந்திய ராணுவத்தின் வடக்குப் பிரிவு வெளியிட்டுள்ளது.

பாங்கோங் ஏரியின் இருபுறமும் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூடாரங்கள் மற்றும் பதுங்கு குழிகளை சீனப் படைகள் அழிக்கும் காட்சிகளும், மலைப்பாங்கான பகுதியில் அதிக எடைகொண்ட பொருட்களுடன் வீரர்கள் நடந்துசெல்லும் காட்சிகளும் உள்ளன. மேலும், வீரர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் காத்திருந்தன.

நிலத்தை சமப்படுத்தும் பணியில், இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. ஃபிங்கர் 8 பகுதியில் சீனப் படைகளும், ஃபிங்கர் 3 பகுதியில் இந்தியப் படைகளும் நிறுத்தப்படும் என்றும் இடைப்பட்ட பகுதியில் யாரும் ரோந்து செல்ல மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... தமிழகத்தில் ரூ. 31,500 கோடி மதிப்பிலான பெட்ரோலியத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Indian army, Ladakh