மார்ச் 31-க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது!

மார்ச் 31-க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது!
  • News18
  • Last Updated: February 15, 2020, 12:00 PM IST
  • Share this:
ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31ஆம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் 10 எண்களைக் கொண்ட பான் கார்டின் ஆதார் எண்ணை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை 30 கோடியே 75 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 17 கோடியே 58 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை.

இந்த சூழலில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் கார்டு செல்லாது என்றால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மார்ச் 31க்கு பின் எப்போது ஆதார் எண்ணை இணைக்கிறோமோ அந்த நாள் முதல்தான் பான் கார்டு மீண்டும் செல்லுபடியாகும்.


இதையும் படிங்க: ஆதாருடன் பான் கார்டுடை இணைத்து விட்டீர்களா? எப்படி இணைக்கலாம் ?

Also see:
 
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்