தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்று எச்சரிக்கை... எல்லையில் தீவிர கண்காணிப்பு...!

சுதந்திர தினமான இன்று, காஷ்மீரில் இன்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: August 15, 2019, 9:06 AM IST
தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்று எச்சரிக்கை... எல்லையில் தீவிர கண்காணிப்பு...!
கோப்புப்படம்
Web Desk | news18
Updated: August 15, 2019, 9:06 AM IST
இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் உச்சகட்ட உஷார் நிலையில் இருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உரி பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய நேற்று முன்தினம் இரவில் முயற்சி நடைபெற்றதாகவும், இதற்காக பாகிஸ்தான் ராணுவ நிலைகளிலிருந்து அதிக அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ராணுவம் முறியடித்துள்ளதாகவும், எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள், உச்சகட்ட உஷார் நிலையில் இருப்பதாகவும் ராணுவ உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினமான இன்று, காஷ்மீரில் இன்று சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழல் அமைதியாக இருப்பதாகவும் மாநில முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.

Also see... காஷ்மீர் இணைப்பின் கதை!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...